தேசிய மருந்து கண்காணிப்பு வாரம் 2026 - செப்டம்பர் 17/23
September 25 , 2026 59 days 231 0
மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் பகுத்தறிவுப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 6-வது தேசிய மருந்து கண்காணிப்பு வாரம் (NPW) 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23 வரை அனுசரிக்கப்படும்.
இது காசியாபாத்தில் உள்ள இந்திய மருந்து கண்காணிப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்பு மையத்தால் (NCC-PvPI) நடத்தப்படுகிறது மற்றும் இது உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்துடன் (செப்டம்பர் 17) இணைந்து நடைபெறுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Promoting Rational Use of Medicines through Pharmacovigilance – A Step Towards Safer Healthcare” என்பதாகும்.
மருந்து கண்காணிப்பு (Pharmacovigilance) மருத்துவப் தயாரிப்புகளுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் (ADRs) மற்றும் பிற பாதகமான நிகழ்வுகளைக் கண்டறிந்து புகாரளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்தப் பிரச்சாரம் 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய மருந்து கண்காணிப்புத் திட்டத்தின் (PvPI) கீழ் வழக்கமான தேசிய முன்னெடுப்பாக செயல்பட்டு வருகிறது.