TNPSC Thervupettagam

தேசிய மருந்து கண்காணிப்பு வாரம் 2026 - செப்டம்பர் 17/23

September 25 , 2026 7 days 81 0
  • மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் பகுத்தறிவுப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 6-வது தேசிய மருந்து கண்காணிப்பு வாரம் (NPW) 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23 வரை அனுசரிக்கப்படும்.
  • இது காசியாபாத்தில் உள்ள இந்திய மருந்து கண்காணிப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்பு மையத்தால் (NCC-PvPI) நடத்தப்படுகிறது மற்றும் இது உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்துடன் (செப்டம்பர் 17) இணைந்து நடைபெறுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Promoting Rational Use of Medicines through Pharmacovigilance – A Step Towards Safer Healthcare” என்பதாகும்.
  • மருந்து கண்காணிப்பு (Pharmacovigilance) மருத்துவப் தயாரிப்புகளுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் (ADRs) மற்றும் பிற பாதகமான நிகழ்வுகளைக் கண்டறிந்து புகாரளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தப் பிரச்சாரம் 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய மருந்து கண்காணிப்புத் திட்டத்தின் (PvPI) கீழ் வழக்கமான தேசிய முன்னெடுப்பாக செயல்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்