தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் 2025- டிசம்பர் 02
December 5 , 2025 14 hrs 0 min 3 0
மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தொழில்துறை விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள், MIC (மெத்தில் ஐசோசயனேட்) வாயு கசிவால் ஏற்பட்ட 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
இந்தியாவில் உள்ள முக்கிய மாசுபாட்டுச் சட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்றுச் சட்டம் 1981 மற்றும் நீர்ச் சட்டம் 1974 ஆகியவை அடங்கும்.
1974 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட CPCB (மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) இந்தியாவின் முக்கிய மாசுக் கண்காணிப்பு நிறுவனமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Sustainable Living for a Greener Future" என்பதாகும்.