தேசிய மாணாக்கர் படை உருவாக்க தினம் 2025 - நவம்பர் 23
November 28 , 2025 27 days 64 0
இந்த நாள் நவம்பர் மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்திய இளையோர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தேசபக்தியை வளர்ப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1948 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட NCC படையின் 78 வது ஆண்டு நிறைவைக் குறித்தது.
NCC என்பது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் "ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்" என்ற முழக்கத்துடன் செயல்படுகிறது.
1948 ஆம் ஆண்டில் 20,000 வீரர்கள் உடன் தொடங்கிய NCC ஆனது 713 மாவட்டங்களில் 20 லட்சம் பிரிவுகளாக வளர்ந்துள்ளது.
NCC கொடியின் மையத்தில் NCC சின்னத்துடன் சிவப்பு (இந்தியக் காலாட் படை), கருநீலம் (இந்தியக் கடற்படை), மற்றும் வெளிர் நீலம் (இந்திய விமானப் படை) ஆகிய வண்ணங்கள் உள்ளன.