மின்னல் தொடர்பான பேரழிவுகளைப் பற்றி விவாதிப்பதற்காக 9வது தேசிய மின்னல் மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாநாடு இந்தியாவில் ஒரு பெரிய தீவிர வானிலை அபாயமாக உள்ள மின்னல் அபாயங்கள் குறித்து கவனம் செலுத்தியது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Lightning: Atmospheric Electricity and Extreme Weather Events" என்பதாகும்.
இந்த நிகழ்வின் போது 7வது வருடாந்திர மின்னல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இது CROPC (பருவநிலை தகவமைப்பு கண்காணிப்பு அமைப்புகள் மேம்பாட்டு சபை), IMD (இந்திய வானிலை ஆய்வுத் துறை), NRSC–ISRO (தேசிய தொலைதூர உணர் நுட்ப மையம்–இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) மற்றும் NDMA (தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மின்னல் என்பது மேகங்களுக்கு இடையில் அல்லது மேகங்களுக்கும் தரைக்கும் இடையில் மின்சார ஆற்றல் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் ஓர் இயற்கை நிகழ்வு ஆகும்.
மின்னல் ஆனது இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் மின்னல் தாக்குதல்கள் 2019 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 400% அதிகரித்துள்ளன.
அதிக ஆபத்துள்ள மாநிலங்களில் இராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை அடங்கும்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) டாமினி, மௌசம் மற்றும் சச்செட் கைபேசி செயலிகள் மூலம் மின்னல் எச்சரிக்கைகளை வழங்குகிறது.