TNPSC Thervupettagam

தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதி

July 10 , 2019 2134 days 698 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துடன் (National Investment and Infrastructure Fund-NIIF) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • NIIF ஆனது முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை அமைப்பாகும்.
  • இது 40000 கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட தொகுப்புடன் 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது.
  • நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கு நீண்டகால மூலதனத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • இதன் 49% பங்குகள் இந்திய அரசிடம் உள்ளது. மீதமுள்ள 51% பங்குகள் வெளிநாட்டுக் குழுமங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்