தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர்
April 30 , 2022 1194 days 556 0
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) ஆனது, 2022-23 ஆம் ஆண்டிற்கான தனது தலைவராக கிருஷ்ணன் ராமானுஜம் என்பவரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் நிறுவன வளர்ச்சிக் குழுவின் தலைவராக உள்ளார்.
இந்தியாவில் உள்ள அக்சென்ச்சர் என்ற நிறுவனத்தின் தலைவரும் மூத்த நிர்வாக இயக்குநருமான ரேகா M. மேனன் என்பவரையடுத்து ராமானுஜம் இந்தப் பதவிப் பொறுப்பினை ஏற்றார்.
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேஷ்வரி என்பவரை 2022-23 ஆம் ஆண்டிற்கான துணைத் தலைவராக நியமிப்பதாகவும் நாஸ்காம் அறிவித்தது.
இந்தப் பதவியில் ராமானுஜத்திற்குப் பிறகு மகேஸ்வரி அப்பொறுப்பினை ஏற்பார்.