“சுரக்சியா” என்ற பெயர் கொண்ட ஒரு தேசிய இணைய வாயிலானது உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12 அன்று தொடங்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது “இந்தியாவில் மனித – யானை மோதல் மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகள்” (Best practices of Human-Elephant Conflict Management in India) என்ற ஒரு சிறு புத்தகமும் வெளியிடப் பட்டது.
இந்த இணைய வாயிலானது ஆய்விற்கான தரவுகளின் சேகரிப்பிற்கு உதவ உள்ளது. மேலும் அத்தரவுகளின் அடிப்படையில் முக்கியமான முடிவுகளை கண்டறியவும் இது உதவ இருக்கின்றது.
யானைகள் திட்டமானது 1992 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இந்திய யானைகள் பின்வருவனவற்றின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
வலசை போகும் இனங்களுக்கான ஒப்பந்தத்தின் பட்டியல் I
வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் அட்டவணை I