2019 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதியன்று மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை அமைச்சரான பியூஷ் கோயல் தேசிய வடிவமைப்பு நிறுவன (திருத்த) மசோதா, 2019ஐ மாநிலங்களவையில் அறிமுகப் படுத்தினார்.
இது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று மாநிலங்களவையாலும் 2019 ஆம் நவம்பர் 26 அன்று மக்களவையாலும் நிறைவேற்றப் பட்டது.
இந்த மசோதாவானது அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கும் 2014 ஆம் ஆண்டின் தேசிய வடிவமைப்பு நிறுவனச் சட்டத்தைத் திருத்த முயல்கின்றது.
இந்த மசோதாவானது ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள 4 தேசிய வடிவமைப்பு நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்க முற்படுகின்றது.
தற்போது, இந்த நிறுவனங்கள் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் சங்கங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவை பட்டங்கள் அல்லது பட்டயச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்க வில்லை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அவை அறிவிக்கப்பட்டால், அந்த நான்கு நிறுவனங்களுக்கும் பட்டங்கள் மற்றும் பட்டயச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான அதிகாரம் வழங்கப்படும்.