TNPSC Thervupettagam

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித் தொகைத் திட்டம்

February 25 , 2022 1267 days 643 0
  • தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தினைத் தொடரச் செய்வதற்கு கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆண்டு வருமான வரம்பை 1.5 லட்சம் ரூபாய் என்ற அளவிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பது போன்ற தகுதி வரையறைகளில் குறைந்தபட்ச மாற்றங்களுடன் இந்தத் திட்டத்தினை 2025 -26 ஆம் ஆண்டு  வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி, 8 ஆம் வகுப்பிலேயே அவர்கள் பள்ளிப் படிப்பினைக் கைவிடாமல் அவர்களின் படிப்பைத் தொடரச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆண்டிற்கு தலா ரூ.12,000 உதவித் தொகையானது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
  • 2008-09 ஆம் ஆண்டில் அரசு இத்திட்டத்தினைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்