2020 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விருதுகளானது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப் பட்டு உள்ளது.
7 பிரிவுகளில் 73 வெற்றியாளர்கள் தங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவரிடமிருந்துப் பெற உள்ளனர்.
தற்பொழுது தேசிய விளையாட்டு விருதுகள் வரலாற்றில் முதன்முறையாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக 5 விளையாட்டு வீரர்களும் அர்ஜுனா விருதுக்காக 27 தடகள வீரர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
மேலும், 8 பாரா (மாற்றுத் திறனாளிகள்) விளையாட்டு ஆளுமைகள் 2020 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விருதுகளில் இடம் பிடித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் (முதலாவது), மகேந்திர சிங் டோனி மற்றும் விராத் கோலி ஆகியோருக்குப் பிறகு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறும் 4வது கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆவார்.
வினேஷ் போகாட் 2018 ஆம் ஆண்டு ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது பெண் மல்யுத்த வீரர் ஆவார்.
இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்றாவது ஹாக்கி வீரர் மற்றும் முதலாவது பெண் ஹாக்கி வீரர் ராணி ஆவார்.