தேசிய வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
April 2 , 2023 864 days 357 0
மத்திய அரசானது, வெறிநாய்க்கடி நோயினைத் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்தச் செய்வதற்காகவும் தேசிய வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
தேசிய வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் உத்திகள் பின்வருமாறு:
தேசிய இலவச மருந்து வழங்கீட்டு முன்னெடுப்புகள் மூலமாக வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு மருந்து மற்றும் வெறிநாய்க் கடி நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோகுளோபுலின்) ஆகியவற்றினை வழங்குதல்
பொருத்தமான விலங்கு கடி பாதிப்புகளின் மேலாண்மை, வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பற்றிய பயிற்சி வழங்குதல்
விலங்கு கடி பாதிப்புகள் மற்றும் வெறிநாய்க்கடி நோய்களால் ஏற்படும் இறப்புப் பதிவுகளின் கண்காணிப்பினை வலுப்படுத்துதல்
வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து ‘நாய்கள் மூலம் பரவும் வெறிநாய்க்கடி நோயின் ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டம் (NAPRE)’ ஆனது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் தெரு நாய்கள் தொடர்பான விவகாரங்களை நிர்வகிப்பதும் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும்.