குஜராத்தின் லோத்தலில் உள்ள பழமையான ஹரப்பா நாகரீகம் பரவியிருந்த இடத்திற்கு அருகில் கடல்சார் அருங்காட்சியகத்தை அமைப்பதற்குப் போர்ச்சுக்கலுடன் இணைந்து இந்தியா செயல்படவிருக்கின்றது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இது போர்ச்சுக்கலின் லிஸ்பனில் உள்ள கடற்படை அருங்காட்சியக மாதிரியில் அமைக்கப்படவிருக்கின்றது. இது போர்ச்சுக்கீசியக் கடற்படையினால் நிர்வகிக்கப் படவிருக்கின்றது.
இந்தத் திட்டம் சாகர்மாலா திட்டத்தின் கீழ் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வகம், இந்தியக் கடற்படை, குஜராத் மாநில அரசு ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்பட விருக்கின்றது.