TNPSC Thervupettagam

தேசியக் கட்சி அந்தஸ்து

April 12 , 2023 831 days 666 0
  • அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
  • மேலும் திரிணாமுல் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசியக் கட்சி என்ற ஒரு அந்தஸ்தினையும் திரும்பப் பெற்றது.
  • திரிணாமுல் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீக்கப் பட்டதால், நாட்டில் தற்போது 6 தேசியக் கட்சிகள் மட்டுமே உள்ளன.
  • பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஆகியவையே தற்போது தேசியக் கட்சிகளாக உள்ளன.
  • தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி நான்கு மாநிலங்களில் ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப் பட்டால் ஒரு கட்சிக்குத் தேசியக் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும்.
  • மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், மொத்தம் செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது ஆறு சதவீத வாக்குகளையும், சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலில் தலா இரண்டு இடங்களையும் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்