TNPSC Thervupettagam

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபைக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து

January 6 , 2026 2 days 36 0
  • தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபை (NCERT) 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறக்கூடும்.
  • இந்தத் திட்டமானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வரவிருக்கும் கூட்டத்தில் ஒப்புதல் பெற உள்ளது.
  • NCERT என்பது கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, பள்ளி பாடத் திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களைத் தயாரிக்கின்ற ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து ஆனது 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
  • நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் பாடநெறிகளை வடிவமைத்து அவற்றின் சொந்தப் பட்டங்களை வழங்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்