நாட்டின் முதலாவது மத்திய காவல் துறைப் பல்கலைக் கழகம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனை அதிவேக நெடுஞ்சாலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட இருக்கிறது.
காவல் துறை, உள்பாதுகாப்பு, இணைய வழிக் குற்றங்கள் மற்றும் தடய அறிவியல் தொடர்பான இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை இந்தப் பல்கலைக் கழகம் வழங்கும்.
இந்த மத்திய பல்கலைக் கழகமானது காவல் துறையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் அதிலும் குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் உள்ள பிரிவுகளுக்குப் பயனளிக்கும் வகையில் அமையும்.
இந்தப் பல்கலைக் கழகத்தில் நடத்தை அறிவியல் தொடர்பான அறிவுத் தளம் உருவாக்கப்படும்.