தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, தொற்றுநோய் ஏற்பட்ட முதல் ஆண்டான 2020 ஆம் ஆண்டில், சமீபத்தியக் காலங்களில் வேலையில்லாமல் இருந்தவர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகி உள்ளன.
முதன்முறையாக தற்கொலை எண்ணிக்கையானது 3,000 என்ற அளவைத் தாண்டி உள்ளது.
3548 நபர்கள் தற்கொலையால் இறந்துள்ளனர்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் தான் வேலையில்லாதவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு (336), அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடன் சுமை அல்லது திவால்தன்மை காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளில், மகாராஷ்டிரா 1341 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு (524) ஆகியவை உள்ளன.
தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில், விவசாயிகள் தான் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர்.