தேசியக் குற்ற ஆவணப்பதிவு வாரியத்தின் நிறுவன தினம் - மார்ச் 12
March 16 , 2022 1251 days 413 0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியக் குற்ற ஆவணப்பதிவு வாரியத்தின் 37வது நிறுவனத் தினம் (எழுச்சித் தினம்) கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
தேசியக் குற்ற ஆவணப்பதிவு வாரியத்தின் நிறுவன தின விழாவில் கலந்து கொள்ளும் முதல் மத்திய உள்துறை அமைச்சர் இவரே ஆவார்.
தாண்டன் குழு, தேசியக் காவல் ஆணையம் (1977-1981) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பணிக்குழு (1985) ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1986 ஆம் ஆண்டில் தேசியக் குற்ற ஆவணப் பதிவு வாரியம் நிறுவப்பட்டது.