இந்தியா சுதந்திரம் அடைந்ததின் 75 ஆண்டுகளை நினைவு கூரும் வகையில் தேசிய அளவில் தேசியக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது 259 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்மட்ட தேசியக் குழுவாகும்.
இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருகின்றது.
இந்த 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பாக, அதாவது 75 வாரங்களுக்கு முன்னதாக இந்த மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
மார்ச் 12 ஆம் தேதியானது மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்றுப் புகழ்பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் 91வது ஆண்டு விழாவைக் குறிக்கின்றது.