தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் கடன் வழங்கீட்டு திட்டம் – தமிழ்நாடு
August 12 , 2024 264 days 302 0
தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) கடன் வழங்கீட்டுத் திட்டத்தில் தமிழக அரசானது வெளிப்படையான ஆர்வமின்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இது நலிவுற்றப் பிரிவினருக்கான உதவித் திட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
2019-20 ஆம் ஆண்டு முதல், மாநில அரசானது 106.15 கோடி ரூபாய் மதிப்பு வரையில் கடன் பெற்றுள்ளது.
2023-24 ஆம் ஆண்டு முதல், கடந்த இரண்டு ஆண்டுகளில் 5.78 கோடி ரூபாய் நிதி உதவியினைப் பெற்றாலும், NCDC கழகத்திடமிருந்து எந்தக் கடனையும் பெறுவதை இந்த மாநில அரசு நிறுத்தியது.
ஆந்திரப் பிரதேச மாநிலமானது 27,260.03 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு 38,252.79 கோடி ரூபாயும் கடன் பெற்றுள்ளன.
நலிவுற்றப் பிரிவினருக்கான திட்டங்களுக்காக வேண்டி மாநில அரசுகள் மூலம் விண்ணப்பித்தால் அதற்கான கடனுக்கான வட்டி விகிதம் 11.5% ஆக இருக்கும்.
நேரடி நிதியுதவிச் சூழலில், வட்டி விகிதங்கள் 11.8% (1 கோடி ரூபாய் வரையிலான செலவினம் கொண்ட திட்டங்கள்) மற்றும் 11.92% (1 கோடி ரூபாய்க்கு மேலான செலவினம் கொண்ட திட்டங்கள்) ஆகும்.
NCDC கழகத்தின் வட்டி விகிதங்கள் "பல நிபந்தனைகளுடன்" கூடியதாக உள்ளதோடு, "மிக அதிகமாகவும்" உள்ளன.