மத்திய உள்துறை அமைச்சகமானது, 2025 ஆம் ஆண்டு தேசியக் கூட்டுறவு கொள்கையினை அறிமுகப்படுத்தியது.
இந்தப் புதிய கொள்கையானது 23 ஆண்டுகளுக்கு முன்பு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் போது உருவாக்கப் பட்ட முந்தைய கூட்டுறவு கொள்கைக்கு மாற்றாக அமைகிறது.
இந்தக் கொள்கையானது 2025 ஆம் ஆண்டு முதல் 2045 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கூட்டுறவுத் துறையை 'சஹர்கர் சே சம்ரிதி' (ஒத்துழைப்பு மூலம் செழிப்பு) என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வழி நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையானது அடித்தளத்தை வலுப்படுத்துதல், புத்துயிர்ப்பினை ஊக்குவித்தல், எதிர்காலத்திற்காக கூட்டுறவுகளைத் தயார் செய்தல், உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், புதிய துறைகளில் விரிவாக்கங்களை மேற்கொள்ளுதல் மற்றும் இளைஞர்களைக் கூட்டுறவு மேம்பாட்டில் ஈடுபடுத்துதல் ஆகிய ஆறு தூண்களைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்ட கூட்டுறவுத் துறை அமைச்சகமானது, 1979 ஆம் ஆண்டு முதல் வேளாண் அமைச்சகத்திலிருந்து பிரிக்கப் பட்டது.
சகரித மந்திராலயம் என்று அழைக்கப்படும் இந்த அமைச்சகம், 'சஹகர் சே சம்ரிதி' என்ற முழக்கத்தின் கீழ் செயல்படுகிறது மற்றும் அதன் தொடக்கத்திலிருந்தே மாபெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.