இந்த தினமானது 1947 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சபையால் மூவர்ணக் கொடி ஏற்றுக் கொள்ளப் பட்டதைச் சிறப்பிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டின் ஒற்றுமை, துணிவு மற்றும் உண்மையின் பெரும் அடையாளமாக விளங்கும் கொடியின் அடையாளத்தை இந்தத் தினம் கொண்டாடச் செய்வதோடு, குடிமக்கள் தேசியக் கொடியின் கண்ணியத்தை மதிக்கவும், தேசிய மதிப்புகளை நிலை நிறுத்தவும் நினைவூட்டுகிறது.