1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபையால் மூவர்ணக் கொடி (இந்தியாவின் தேசியக் கொடி) ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் தேசியக் கொடி தினம் கடைபிடிக்கப்பட்டது.
தற்போதைய தேசியக் கொடியானது இந்திய காவி, வெள்ளை மற்றும் இந்தியப் பச்சை ஆகிய மூன்று கிடைமட்டப் பட்டைகளைக் கொண்டுள்ளதுடன் அதன் நடுவில் கருநீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரம் உள்ளது.
1947-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கொடியில் இருந்த ராட்டையை (நூற்கும் சக்கரம்) மாற்றி அசோகச் சக்கரம் இடம்பெற்றது.
இந்தியக் கொடிச் சட்டம் 2002 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. மேலும் தேசியக் கொடியின் காட்சி மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
தேசியக் கொடியானது இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைக் குறிக்கிறது.