2021 ஆம் ஆண்டிற்கான தேசியச் சாதனை ஆய்வு அறிக்கையானது கல்வித் துறை அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையினால் வெளியிடப் பட்டு உள்ளது.
இது மூன்று வருட சுழற்சிக் காலத்திற்கு 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளின் கற்றல் திறன்களின் விரிவான மதிப்பீட்டு ஆய்வினை நடத்துவதன் மூலம் நாட்டில் பள்ளிக் கல்வி முறையின் நிலையை மதிப்பிடுகிறது.
பள்ளிக் கல்வி முறையின் ஒட்டு மொத்த மதிப்பீட்டை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டில் தேசியச் சாதனை ஆய்வு நடத்தப்பட்டது.