சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்த நாளையும், அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளையும் குறிக்கும் வகையில் மத்திய அரசு மூன்று உயர்மட்டக் குழுக்களை அமைத்துள்ளது.
தனித்தனி அரசு இதழ் வெளியீடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள படி, பிரதமர் மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்குவார்.
கலாச்சார அமைச்சகம் ஆனது சர்தார் படேலின் குழுவிற்கான அரசிதழ் அறிவிப்பை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வெளியிட்டது.
1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று பிறந்த சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்றும் நினைவு கூறப் படுகிறார்.
பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாளுக்கான குழு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய பழங்குடியினத் தலைவராகவும் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் பிர்சா முண்டா கௌரவிக்கப் படுகிறார்.
வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் குழுவிற்கான தனி அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அடல் பிஹாரி வாஜ்பாய் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான முழு பதவிக்காலம் உட்பட மூன்று முறை பிரதமராகப் பணியாற்றினார்.