TNPSC Thervupettagam

தேசியத் தேர்வு முகமை

August 25 , 2020 1729 days 731 0
  • மத்திய அமைச்சரவையானது மத்திய அரசில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒரு பொது முதனிலைத் தேர்வை நடத்துவதற்காக தேசியத் தேர்வு முகமையை (NRA -  National Recruitment Agency) அமைக்க முடிவு செய்துள்ளது.
  • NRA ஆனது அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் உள்ள அரசிதழில் பதிவு செய்யப் படாத பணிகளுக்கு வேண்டிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பொதுத் தகுதித் தேர்வை (CET - Common Eligibility Test) நடத்த உள்ளது.
  • இந்தத் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அரசாங்கப் பதவிகளுக்கு வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்குப் பதிலாக, ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஒற்றை இணையதள அல்லது ஆன்லைன் தேர்வாக நடத்தப் படும்.
  • தற்பொழுதுள்ள தேர்வு முகமைகளான பணியாளர் தேர்வு ஆணையம் (SSC - Staff Selection Commission) இரயில்வே தேர்வு வாரியம் (RRB – Railway Recruitment Board), வங்கிப் பணியாளர் தேர்வு மையம் (IBPS - Institute of Banking Personnel Selection) ஆகியவை தொடர்ந்து செயல்படும்.
  • ஆரம்பத்தில் CET ஆனது SSC, RRB மற்றும் IBPS ஆகியவற்றின் தொகுதி பி மற்றும் தொகுதி சி (தொழில்நுட்பம் சாராதது) பதவிகளுக்கான தேர்வை மட்டுமே நடத்த உள்ளது.
  • CET ஆனது தேர்வர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முதல் நிலைத் தேர்வாகும். இதன் மதிப்பெண் மூன்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
  • NRA என்பது சமூகப் பதிவுகள் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்