TNPSC Thervupettagam

தேசியத் தொழில்துறை வகைப்பாடு 2025

November 23 , 2025 5 days 37 0
  • புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது உதய்ப்பூரில் 2025 ஆம் ஆண்டு தேசியத் தொழில்துறை வகைப்பாட்டினை (NIC) வெளியிட்டது.
  • NIC 2025 என்பது இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை வகைப்படுத்தச் செய்வதற்கான சமீபத்திய தேசியத் தர நிலையாகும்.
  • 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் வகைப்பாட்டு முறையானது, NIC 1970, 1987, 1990, 1998, 2004 மற்றும் 2008 உட்பட பல முறை திருத்தப்பட்டுள்ளது.
  • NIC 2025 ஆனது கட்டமைப்பு, தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களை பிரதிபலிக்கிறது என்பதோடு மேலும் இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிதி தொழில் நுட்பம், இணைய வணிகம், ஆயுஷ் சுகாதாரம் மற்றும் கைத்தறி போன்ற துறைகளை உள்ளடக்கியது.
  • இது ஐ.நா. சபையின் 5வது சர்வதேசத் தரநிலை தொழில்துறை வகைப்பாடு (ISIC) திருத்தத்தினைப் பின்பற்றுகிறது.
  • NIC 2025 ஆனது, NIC 2008 முறையின் 5 இலக்கக் கட்டமைப்பை மாற்றும் 6 இலக்கக் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது.
  • இதன் புதிய அம்சங்களில் இடைநிலை சேவைகள், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார சேவைகளின் சிறந்த பிரதிநிதித்துவம் ஆகியவை அடங்கும்.
  • NIC 2025 ஆனது இந்தியா முழுவதும் புள்ளி விவர ஆய்வுகள், தேசியக் கணக்குகள், கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கு வழி காட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்