2020 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஒரு தேசியத் தொழில்நுட்ப ஜவுளித் திட்டமானது முன்மொழியப் பட்டுள்ளது.
இது 2020 - 21 முதல் 2023 - 24 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு ரூ. 1,480 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
தொழில்நுட்ப ஜவுளி என்பது அவற்றின் தொழில்நுட்பப் பண்புகள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்காகத் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் ஆகும்.
மருத்துவ ஜவுளி (எ.கா. உட்பொருத்திகள்), புவிசார் ஜவுளி (தடுப்பணைகளின் வலுவூட்டல்), வேளாண் ஜவுளி (பயிர்ப் பாதுகாப்புக்கான ஜவுளி) போன்றவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.