TNPSC Thervupettagam

தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்

July 14 , 2019 2130 days 697 0
  • “தானாக முன் வந்து” (Suo moth) வழக்கினை எடுத்து விசாரிக்கும் அதிகாரம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (NGT - National Green Tribunal) உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
  • NGT என்பது பல்துறைப் பிரச்சனைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாளுவதற்குத் தேவையான வல்லுநர்களைக் கொண்ட ஒரு சிறப்பு அமைப்பாகும்.
  • இது தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010-ன் கீழ் 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • உரிமையியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம், 1908-ன் கீழ் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் NGT பெற்றுள்ளது.
  • இது சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எழும் அனைத்து உரிமையியல் வழக்குகளின் மீதும் நேரடி அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்