தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரம் 2023 – நவம்பர் 15/21
November 21 , 2023 639 days 316 0
குழந்தைகளின் உயிர் வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு வேண்டி புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், 26 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் 28 நாட்களுக்குள் இறக்கின்ற நிலையில் அவர்களில் பெரும்பாலான குழந்தைகள் முதல் வாரத்திலேயே இறப்பதோடு மேலும் கூடுதலாக 26 லட்சம் குழந்தை இறப்புகள் பிரசவங்களின் போது நிகழ்கின்றன.
2014 ஆம் ஆண்டில், இந்தியப் பச்சிளம் குழந்தைகள் செயல் திட்டத்தை (INAP) அறிமுகப் படுத்திய முதல் நாடு இந்தியாவாகும்.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது, 2021 ஆம் ஆண்டில் தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரத்திற்கான இணைய வழி நிகழ்ச்சியினை நடத்தியது.