தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரம் – நவம்பர் 15 முதல் 21 வரை
November 19 , 2022 976 days 342 0
இந்த வாரம் சுகாதாரத் துறையில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஒரு முன்னுரிமைப் பகுதியாக வலுப்படுத்திட எண்ணுகின்றது.
இது பச்சிளம் குழந்தைகளின் காலகட்டத்தில் குழந்தைகளுக்கான ஆரோக்கிய நிலைமைகளை மேம்படுத்தச் செய்வதன் மூலம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்திட எண்ணுகிறது.
இந்த வாரத்திற்கான கருத்துரு என்பது ‘பாதுகாப்பு, தரம் மற்றும் அக்கறையாக வளர்ப்பது – புதிதாகப் பிறந்த ஒவ்வொருவரின் பிறப்புரிமை‘ என்பதாகும்.
இந்திய பச்சிளம் குழந்தைகளுக்கான செயல்திட்டமானது 2014ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இது நாட்டில் தடுக்கக் கூடிய குறைப் பிரசவங்களையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புகளையும் குறைக்கச் செய்வதை அதிகரித்திட வேண்டும் என்பதில், ‘2030ம் ஆண்டிற்குள்ளாக ஒற்றை இலக்கு பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம்’ என்ற இலக்கினையும், ‘2030ம் ஆண்டிற்கு உள்ளாக ஒற்றை இலக்கு குறைப் பிரசவ விகிதம்’ என்ற இலக்கினையும் அடைத்திட எண்ணுகின்றது.