May 14 , 2026
16 hrs 0 min
3
- ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பஞ்சாயத்துகளுக்குத் தேசியப் பஞ்சாயத்து விருதுகள் வழங்கப்பட்டன.
- மிஸோரம் மாநிலத்தின் கௌர்தா வடக்கு கிராமம், “தூய்மையான மற்றும் பசுமையான பஞ்சாயத்து” பிரிவில் முதலிடம் பெற்றது.
- கர்நாடகா 6 விருதுகளுடன் முதலிடத்தைப் பிடித்தது; அதைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் தலா 5 விருதுகளைப் பெற்றன.
- தீன தயாள் உபாத்யாய பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஷ்கார் (DDUPSVP) விருதின் கீழ் மொத்தம் 34 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப் பட்டன.
- நாணாஜி தேஷ்முக் சர்வோத்தம் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரசுகார் (NDSPSVP) விருதின் கீழ் 8 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டன.
- NDSPSVP 2025-இன் கீழ், அசாம் மாநிலத்தின் நியூ நபாம் காவ்ன் பஞ்சாயத்து இந்தியாவின் சிறந்த கிராமப் பஞ்சாயத்து விருதை வென்றது.
- பீகாரின் டெல்கப் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பிரஹரு ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.
Post Views:
3