நபார்டு வங்கி தேசியப் பருவநிலை தொகுதிகள் புத்தாக்கச் சவாலை (National Climate Stack Innovation Challenge) தொடங்கியுள்ளது.
வெவ்வேறு காலநிலை தரவுத் தொகுப்புகளை ஒரே டிஜிட்டல் அமைப்பில் ஒருங்கிணைக்கும் தேசியப் பருவநிலை அடுக்கை உருவாக்குவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் சூறாவளி போன்ற காலநிலை அபாயங்களை முன்னறிவிப்பதை மேம்படுத்த உதவும்.
இந்த அமைப்பு விவசாயத் திட்டமிடல், கிராமப்புற நிதி, பேரிடர் தயார்நிலை மற்றும் பொதுக் கொள்கை முடிவுகளுக்கு ஆதரவளிக்கும்.