TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு மீதான புனே பேச்சுவாத்தை

October 31 , 2021 1389 days 587 0
  • தேசியப் பாதுகாப்பு மீதான 6வது புனே பேச்சுவார்த்தையானது (2021) புனே சர்வதேச மையத்தினால் தொடங்கப்பட்டது.
  • பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் தேசியப் பாதுகாப்பிற்கான தயார் நிலைஎன்ற ஒரு கருத்துருவின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தச் சந்திப்பின்போது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு மீது பேரிடர்கள் மற்றும் பெருந்தொற்றுகளின் தாக்கங்கள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதிப்பர்.
  • பேரிடர் தொடர்பான உத்திகளையும் அவர்கள் பரிந்துரைப்பர்.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது, புதுடெல்லியின் கொள்கை தொலைநோக்கு அறக் கட்டளை, மேம்பட்ட உத்திசார் ஆய்விற்கான மையம் மற்றும் சண்டிகரின் தீர்ப்பாய அறக்கட்டளை (தி டிரிபுயுன் டிரஸ்ட்) ஆகியவற்றுடன் இணைந்து புனே சர்வதேச மையத்தினால் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்