தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் தலைவர்
December 8 , 2022 981 days 472 0
தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் (NCBC) தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பொறுப்பேற்றுள்ளார்.
தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையமானது 1993 ஆம் ஆண்டு தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையச் சட்டத்தின் மூலம் மத்திய அரசினால் உருவாக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 102வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் ஒரு அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாக மாறியது.
இது இந்திய அரசியலமைப்பின் 338B என்ற பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் அவர்களால் நியமிக்கப்படுவர்.
இதன பணி நிலைகள் மற்றும் பதவிக் காலம் ஆகியவை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப் படும்.