தேசிய மருத்துவ ஆராய்ச்சி ஆணையமானது தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கை – 2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள புற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டு வாக்கில் 15.7 இலட்சமாக அதிகரிக்க உள்ளது.
புகையிலை தொடர்பான புற்றுநோய்கள் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் புற்றுநோய் விகிதத்தில் 27.1% ஆக உள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் நிகழ்வுகளானது வட - கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாப்பும்பேர் மாவட்டம் ஆகியவை 1 இலட்சம் மக்கள் தொகைக்கு புற்று நோயின் அதிக வயது சரி செய்யப்பட்ட விகிதத்தை (Age adjusted rates) பதிவு செய்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மார்பகப் புற்றுநோயானது சென்னை, ஹைதராபாத், தில்லி மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்களில் காணப்படுகின்றது.