தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - நவம்பர் 07
November 10 , 2022 1014 days 374 0
மக்கள் மத்தியில் மரணத்தை ஏற்படுத்தும் பல கொடிய நோய்களில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 70% குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பதிவு ஆகியுள்ளது.
நாடு முழுவதும் புற்றுநோய்ச் சிகிச்சைக்கான அணுகலை எளிதாக்குவதற்காக 1975 ஆம் ஆண்டில் தேசியப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
1867 ஆம் ஆண்டு நவம்பர் ஆம் தேதியன்று போலந்தின் வார்சா நகரில் பிறந்த மேரி கியூரி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்தத் தேதியானது இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவர் ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிப்பிற்கானப் பெருமைக்கு உரியவர் ஆவார்.
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு மிக முக்கியமான முன்னேற்றமான கதிரியக்கச் சிகிச்சையை உருவாக்க இது உதவியது.