தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - நவம்பர் 07
November 10 , 2024 250 days 163 0
புற்றுநோயைத் தடுத்தல், அதைக் கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சை அளித்தல் குறித்தப் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் மையக் கருத்தாகும்.
1867 ஆம் ஆண்டு இதே நாளில் தான், புகழ்பெற்ற போலந்து-பிரெஞ்சு இயற்பியலாளர் மேரி கியூரி பிறந்தார்.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 14.1 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்று நோய்ப் பாதிப்புகள் மற்றும் 9.1 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகின.
பெண்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் பொதுவான வீரியமிக்க புற்றுநோய்கள் மார்பகம் மற்றும் கருப்பை வாய் ஆகியனவாகும் என்ற நிலையில் புதிய பாதிப்புகளில் இவை முறையே 27% மற்றும் 18% பங்கினை கொண்டுள்ளன.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Hope, love, and strength: our weapons against cancer!" என்பதாகும்.