தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் - நவம்பர் 07
November 9 , 2020 1739 days 523 0
இது 2014 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, உலகளவில் மனிதர்களின் இறப்பிற்குப் புற்றுநோய் என்பது இரண்டாவது முக்கிய காரணமாகும்.
2018 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 18 மில்லியன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவற்றில் இந்தியாவில் மட்டுமே 1.5 மில்லியன் மக்கள் உள்ளனர்.
2018 ஆம் ஆண்டில், உலகளவில் 9.5 மில்லியன் அளவிற்கு புற்றுநோய் மூலமான இறப்புகள் நிகழ்ந்தன. அதில் இந்தியாவில் மட்டும் 0.8 மில்லியன் அளவிற்கு புற்றுநோய் மூலமான இறப்புகள் நிகழ்ந்தன.
இந்த நாள் மேரி கியூரியின் பிறந்த நாளுடன் ஒத்துப் போகிறது.