தேசியப் புள்ளியியல் தினமானது சமூகப் பொருளாதார திட்டமிடுதல் மற்றும் கொள்கை இயற்றுதலில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக வேண்டி ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 29 அன்று கடைபிடிக்கப் படுகிறது.
பட்டினியை ஒழிக்கச் செய்தல், உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்து ஆகியவற்றை அடைதல் மற்றும் நிலையான வேளாண்மையை ஊக்குவித்தல் (ஐ.நா. வின் நிலையான மேம்பாட்டு இலக்கு 2) என்பதே இந்த ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துருவாகும்.
மேலும் புள்ளிவிவரங்கள், புள்ளிவிவர அமைப்பு முறை மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் ஆகிய துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்த் சந்திரா மஹலநோபிஸ் ஆற்றியச் சிறந்த பங்களிப்பினையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
இவர் பெரும்பாலும் இந்தியப் புள்ளியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.
இவர் 1933 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் புள்ளிவிவரப் பத்திரிக்கையான ‘சங்க்யா’ எனும் இதழை நிறுவினார்.
மேலும் இவர் மஹலநோபிஸ் தொலைவின் புள்ளி விவர அளவீட்டிற்காகவும் நினைவு கூறப்படுகிறார்.
இவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தினை நிறுவியவராவார்.
மத்திய அரசானது 2007 ஆம் ஆண்டில் ஜுன் 29 ஆம் தேதியினை தேசியப் புள்ளியியல் தினமாக அறிவித்தது.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இந்தியப் பொருளாதாரம் குறித்த மஹலநோபிசுனுடைய கணித விளக்கத்தைச் சார்ந்து அமைக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது இந்தியாவில் கனரகத் தொழிற்சாலைகளின் உருவாக்கத்தை ஊக்குவித்தது.
இது பின்பு, நேரு-மஹலநோபிஸ் மாதிரி அல்லது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தொழில்துறை உத்தியாக உருப்பெற்றது.