இந்திய அரசானது, 2025 ஆம் ஆண்டில் புவி வெப்ப ஆற்றல் குறித்த தனது முதல் தேசிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது புவிவெப்ப ஆற்றல் மேம்பாட்டினை ஒழுங்குபடுத்தி மேற்பார்வையிடும்.
இந்தக் கொள்கையானது ஆராய்ச்சி, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இமயமலை, கேம்பே படுகை, ஆரவல்லி, மகாநதிப் படுகை மற்றும் கோதாவரி நதிப் படுகை உள்ளிட்ட பத்து புவிவெப்ப ஆற்றல் மிக்க பகுதிகள் அடையாளம் காணப் பட்டு உள்ளன.
இந்தியாவின் மதிப்பிடப்பட்ட புவி வெப்ப ஆற்றல் திறன் சுமார் 10 ஜிகாவாட் ஆகும்.
இந்தக் கொள்கையானது கலப்பின புவி வெப்ப-சூரிய மின் நிலையங்கள் மற்றும் பயன்படுத்தப் படாமல் விடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை மறு சீரமைப்பதை ஊக்குவிக்கிறது.