ஒரு தனித்துவமான கூட்டு முயற்சியாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மத்தியப் பெண்கள் & குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை தேசியப் பெண்கள் தொழில் முனைவோர் கரிமத் திருவிழாவை இணைந்து நடத்துவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தத் திருவிழாவானது ஹரியானாவில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தினால் (National Institute of Food Technology Entrepreneurship and Management - NIFTEM) திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கின்றது.
NIFTEM என்பது இந்திய அரசின் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு கல்விசார் நிறுவனமாகும்.
இந்தத் திருவிழாவானது இந்தியப் பெண் தொழில்முனைவோர் & விவசாயப் பொருள்களை வாங்குபவர்களுடன் சேர்த்து விவசாயிகளை இணைப்பதற்கு ஊக்குவிப்பதையும் நிதி உள்ளடக்கல் மூலம் பெண்கள் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதையும் இந்தியாவில் கரிம உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.