TNPSC Thervupettagam

தேசியப் பெண்கள் தொழில்முனைவோர் கரிமத் திருவிழா

December 10 , 2019 2076 days 699 0
  • ஒரு தனித்துவமான கூட்டு முயற்சியாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மத்தியப் பெண்கள் & குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை தேசியப் பெண்கள் தொழில் முனைவோர் கரிமத் திருவிழாவை இணைந்து நடத்துவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தத் திருவிழாவானது ஹரியானாவில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தினால் (National Institute of Food Technology Entrepreneurship and Management - NIFTEM) திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கின்றது.
  • NIFTEM என்பது இந்திய அரசின் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு கல்விசார் நிறுவனமாகும்.
  • இந்தத் திருவிழாவானது இந்தியப் பெண் தொழில்முனைவோர் & விவசாயப் பொருள்களை வாங்குபவர்களுடன் சேர்த்து விவசாயிகளை இணைப்பதற்கு ஊக்குவிப்பதையும் நிதி உள்ளடக்கல் மூலம் பெண்கள் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதையும் இந்தியாவில் கரிம உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்