தேசியப் போதைப்பொருள் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு 2025–26
January 6 , 2026 2 days 60 0
மத்திய அரசானது, இந்தியா முழுவதும் உள்ள போதைப்பொருள் பயன்பாட்டு நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2025–26 ஆம் ஆண்டு தேசிய மருந்து பயன்பாட்டுக் கணக்கெடுப்பை (NDUS) நடத்த உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் வீட்டு ஆய்வுகள் மற்றும் பதிலளிப்பு சார்ந்த மாதிரிகள் மூலம் சுமார் 20 லட்சம் மக்கள் மத்தியில் நடத்தப்படும்.
முதல் முறையாக, இந்தக் கணக்கெடுப்பில் உள்நாட்டு போதைப்பொருள் பயன்பாட்டின் வடிவங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சமூக-பொருளாதார மற்றும் சுகாதாரக் கவலைகள் குறித்து ஆவணப்படுத்தப்படும்.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது சிறைக் கைதிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போன்ற குறிப்பிட்ட மக்கள் மத்தியில் நடத்தப்படும்.
இது நாஷா முக்த் பாரத் அபியான் போன்ற முன்னெடுப்புகளின் தாக்கத்தை ஆராய்வதோடு, மனோவியல் சார்ந்த போதைப் பொருட்களின் பயன்பாடுகளில் வளர்ந்து வரும் போக்குகளை ஆய்வு செய்யும்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தினால் நிதியளிக்கப்படுகின்ற இந்தக் கணக்கெடுப்பு ஆனது, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்பதோடுமேலும் இந்த அறிக்கையானது 2027 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.