TNPSC Thervupettagam

தேயிலை தொழிலாளர்களுக்கான நில உரிமை

December 2 , 2025 10 days 43 0
  • 2025 ஆம் ஆண்டு அசாம் நில உடைமை உச்ச வரம்பு (திருத்தம்) சட்டத்தினை அசாம் அரசு நிறைவேற்றியுள்ளது.
  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பகுதியில் வாழும் குடும்பங்களுக்குக் குடியிருப்பு நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையை இந்த சட்டம் வழங்குகிறது.
  • இது இந்த நிலங்களை தேயிலை சாகுபடியில் துணை நில வகையிலிருந்து நீக்குகிறது.
  • ஒதுக்கப்பட வேண்டிய நில அளவுகளை அரசாங்கம் அறிவித்து, ஒரு பிகாவிற்கு 3,000 ரூபாய் வீதம் சுமார் 65.57 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்.
  • அசாமில் 2 லட்சத்திற்கும் அதிகமான பிகா நிலங்களை உள்ளடக்கிய தொழிலாளர் காலனிகளைக் கொண்டுள்ளசுமார்  825 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
  • இந்தத் திருத்தம் தேயிலைத் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து அவர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்