TNPSC Thervupettagam

தேர்தல் அறிக்கைகள் - கட்டுப்பாடுகள்

March 22 , 2019 2305 days 716 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது (Election Commission of India - ECI) தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் (Model Code of Conduct - MCC) ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட விதிமுறைகளை வகுத்துள்ளது. இது தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் இறுதி தேர்தல் அறிக்கைகளை வெளியிட தடை விதித்துள்ளது.
  • ஒரே கட்டமாக மற்றும் பல கட்டமாக நடைபெறும் தேர்தல்களுக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126-ல் குறிப்பிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று ECI கூறியுள்ளது.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 ஆனது தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்தையும் தடை செய்யக்கூடிய “தேர்தல் அமைதிக் காலத்தை” உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்