மத்திய அரசானது 2021 ஆம் ஆண்டு தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதாவினை மக்களவையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான ஒரு மசோதா ஆகும்.
இந்த மசோதாவானது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய விரும்பும் நபர்களின் ஆதார் எண்ணை வினவுவதற்கு வேண்டி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுமதி வழங்குகிறது.
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களிடம் ஆதார் எண்ணை வினவுவதற்கும் சேர்த்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இந்த மசோதா அனுமதி வழங்குகிறது.
இந்த மசோதாவானது 1950 மற்றும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளைத் திருத்தி அமைக்கிறது.