இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் தேதியன்று பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்தது.
இந்த அறிவிப்புடன் பீகார் முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
பீகாரின் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும் இந்த விதி பொருந்தும்.
தேர்தல் காலத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு பொது நிதியைப் பயன்படுத்தக் கூடாது.
அரசியல் கட்சிகள் சரியான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வக் கடமைகளை தேர்தல் பிரச்சாரத்துடன் இணைப்பது அல்லது அரசாங்க வளங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டு உள்ளது.
கூட்டங்கள், ஊர்வலங்கள், வாக்கெடுப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.