TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரங்கள் வெளியீடு

July 8 , 2022 1045 days 941 0
  • பாரத் ஸ்டேட் வங்கி அதன் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும் அவற்றைப் பணமாக்குவதற்கும் அந்த வங்கிக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் பணத்தை நன்கொடையாக அளிப்பதற்கு வழிவகை செய்யும் செயற்கருவிகளாகும்.
  • தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குச் செல்லு படியாகும்.
  • செல்லுபடியாகும் காலம் முடிந்த பிறகு தேர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால், அதன் மூலம் பணம் பெற இருந்த எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப் படாது.
  • காலாவதியான பத்திரங்களின் மொத்த மதிப்புகள் பிரதமரின் நிவாரண நிதியில் பாரத் ஸ்டேட் வங்கியினால் வைப்பு வைக்கப்படுகின்றன.
  • தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளரின் பெயரைக் கொண்டிருக்காது.
  • எனவே, அரசியல் கட்சிகள் நன்கொடையாளரின் அடையாளத்தினைத் தெரிந்து கொள்ள முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்