தேர்தல் பிரச்சாரச் செலவினம் அதிகரிப்பு
October 25 , 2020
1688 days
521
- மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகமானது மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவினத்தை 10% என்ற அளவில் அதிகரித்துள்ளது.
- இந்த அதிகரிப்பின் மூலம், அனைத்து மாநிலங்களும் 20 இலட்சம் செலவினம் என்ற வரம்பிலிருந்து 22 இலட்சம் செலவினம் என்ற வரம்பிற்குச் செல்ல இருக்கின்றன.
- தற்பொழுது ரூ.28 இலட்சம் என்ற செலவின வரம்பினைக் கொண்டுள்ள மாநிலங்கள் ரூ.30.8 இலட்ச செலவினம் என்ற வரம்பிற்கு மாற உள்ளன.
- நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரிய மாநிலங்களுக்கான செலவின வரம்பானது ரூ.70 இலட்சமாக உள்ளது.
- இது தற்பொழுது ரூ.77 இலட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
- சிறிய மாநிலங்களில், இந்த வரம்பானது ரூ.54 இலட்சத்திலிருந்து ரூ.59 இலட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
Post Views:
521